கணணியில் இணைத்துவிட்டால் தானாகவே மசாஜ் செய்யும் கருவி!!
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணணியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
இக்கருவியினை USB முறையில் கணணியுடன் இணைத்து பயன்படுத்த முடியும், அத்துடன் இக்கருவியினை இயக்குவதற்கு பிரத்தியேகமான மென்பொருளும் காணப்படுகின்றது.
எனினும் மசாஜின் தன்மையை மியூசிக் பிளேயரைக் கொண்டு அதன் சந்தத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் விசேட அம்சமாகும்.
நாம் கணணியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே குறித்த கருவியினை இணைத்துவிட்டால் அது தானாகவ மசாஜ் செய்யும் என்பது மேலதிக தகவலாகும். இதன் விலை 170 அமெரிக்க டொலர்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பதிவுகள்:
மனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை
சுயமாக நூலைக் கட்டும் சப்பாத்துக்கள்: மஜிக் அல்ல (பட, காணொளி இணைப்பு)
நேர்தியாக வடிவமைக்கப்பட்ட அப்பிள் i Watch
சுவாசத்தின் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யும் சாதனம் கண்டுபிடிப்பு
ஹெலிகொப்டரைத் தெரிந்திருக்கும்; ஆனால் இது கார் – கொப்டர்! அதிரடிக் காணொளி இணைப்பு
..பார்வையாளர்கள் 





































