nilamuttram.com

விலைமாதுகளுக்கும் பணத்தை வாரி இறைத்த சாடி கடாபி: இணையத்தளம் மூலம் சீன விலைமாதுகளை ஏற்பாடு செய்துள்ளார்

லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் கடாபியின் மகன்மாரில் ஒருவரான சாடி கடாபி, லண்டனிலுள்ள தனது குடும்பத்துக்கு சொந்தமான 11 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர இல்லத்தில் வாழ்ந்தபோது விலைமாதுகளுக்கும் போதைப் பொருட்களுக்கும் பணத்தை வாரி இறைத்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் சாடி கடாபி (38 வயது) தங்கியிருந்தபோது அவருக்கு மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ஸ்டீபன் பெல்லால் தெரிவிக்கப்பட்ட இத்தகவல்களை பிரித்தானிய “த சண்’ ஊடகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

சாடிக்கு பாதுகாவலை வழங்குவதற்குஸ்டீபன் பெல்லிற்கு (33 வயது) ஒருநாளுக்கு 300 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

சாடி கடாபி மிக மோசமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிவித்த ஸ்டீபன் பெல், “”அவர் விலைமாதுக்களை பெரிதும் விரும்பினார். அவர் இணையத் தளத்தில் சீன விலைமாதுகளைத் தேடிப் பிடிப்பதில் பெருமளவு நேரத்தைச் செலவிட்டு வந்தõர்” என்று கூறினார்.

சாடி கடாபி அடிக்கடி பெண்களின் புகைப்படங்களை தனக்கும் தனது சகாவுக்கும் காண்பித்து அவர்களை தனக்கு ஏற்பாடு செய்து தரும்படி கோருவது வழமையாக இருந்ததாகவும் அவ்வாறு வரும் பெண்களுக்கு ஒரு இரவுக்கு 1500 ஸ்ரேலிங் பவுண் வரை அவர் கட்டணமாக செலுத்தி வந்ததாகவும் ஸ்டீபன் பெல் தெரிவித்தார்.

சாடி கடாபி கொக்கேயின், கஞ்சா போன்ற போதைவஸ்துகளை உபயோகிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் ஒரு சமயம் தன்னிடம் கொக்கேயின் போதைப்பொருளை வாங்கித் தர சாடி நிர்ப்பந்தித்தபோது தான் அதற்கு மறுத்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன் போத்தல் போத்தலாக மதுபானத்தை அருந்துவதும் சாடிக்கு பிடித்தமான ஒன்றென அவர் தெரிவித்தார். அத்துடன் சாடி கடாபி தன்னின சேர்க்கையாளர் எனவும் வதந்திகள் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள சாடியின் இல்லத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டபோது, அங்கிருந்து பெருந்தொகையான தன்னின சேர்க்கை வீடியோ இறுவட்டுகள் கைப்பற்றப்பட்டன.

கடாபியின் மூன்றாவது மகனான சாடி தற்போது அயல்நாடான நைகரில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான சாடி ஒரு சமயம் ஒரு வருட காலத்தில் தனிப்பட்ட ஜெட் விமானங்கள், கார்கள், உடைகள் மற்றும் பெண்களுக்காக 170 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பணத்தை செலவிட்டிருந்தார்.

மேலும் சில பதிவுகள்:

537..பார்வையாளர்கள்