யாழ். திருநெல்வேலியில் மர்மமனிதர்கள் பெண்ணொருவரின் மார்பகப் பகுதியில் தாக்கியுள்ளனர்.
யாழ். திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் மர்மமனிதர்கள் பெண்ணொருவரின் மார்பகப் பகுதியில் தாக்கியுள்ளனர். சி.சிவகௌரி(28) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மர்மமனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்ற போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
இப்படி செய்பவர்கள் மக்களால் விரட்டி பிடிக்கப்படுகின்ற பொழுது போலிசார் அவர்கள் மனநோயாளிகள் என்கிறார்கள். சிங்கள அமைச்சர்களோ செய்தவனின் பெயரைச் சொல்லுங்கள் என்று பாராளுமன்றத்தில் கேட்கின்றார்கள். ஒரு படி மேலே போன மேர்வின் சில்வாவோ தனக்கு போன் பண்ண சொல்லுகிறார். இராணுவமோ பாதுகாப்பு வழங்குகிறது. இதற்கு மேல் மக்கள் என்ன செய்ய அவர்கள் சட்டத்தை கையிலேடுக்கத்தானே வேண்டும்..
மேலும் சில பதிவுகள்:
..பார்வையாளர்கள் 



































