இலங்கையில் யானை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன
இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது.
மகாவலி பகுதியை ஒட்டியுள்ள இடங்களில்தான் இலங்கையில் மிக அதிகமான காட்டு யானைகள் காணப்படுவதாகவும். இந்தக் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் 1751 யானைகளைத் தாம் கண்டதாகவும் வன உயிர் பாதுகாப்பு திணைக்கலத்தின் பணிப்பாளர் ஜே. எச். டி .ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
காட்டில் இருக்கம் நீர் நிலைகளில் ஆட்களை நிறுத்தி அங்கு வந்து நீர் குடிக்கும் யானைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இலங்கையில் காட்டு யானைகள் காணப்படும் இடங்கள் அனைத்திலுமாக 1553 கண்காணிப்பு நிலையங்களை அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக 3,600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ரத்னாயக தகவல் வெளியிட்டார்.
குட்டி யானைகளை பிடிக்கப்போவதில்லை
குட்டி யானைகளை காட்டி இருந்து பிடிக்க இதுவரை அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.
குட்டி யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படும் என்று இலஙை அமைச்சர் ஒருவர் பேசியது, இந்த கணக்கெடுப்பு தொடர்பில் சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் குறைக்க இந்த கணக்கெடுப்பில் தெரியவந்த விபரங்களைப் பயன்படுத்தப் போவதாக வன உயிர் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே. எச். டி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சில பதிவுகள்:
..பார்வையாளர்கள் 



































