nilamuttram.com

மரக்கறி சந்தைப்படுத்தலுக்கு பிளஸ்ரிக் கூடை கட்டாயம்

இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில்,விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள்  பழங்கள் மற்றும் மரக்கறி சந்தைப்படுத்தல்களின் போது பிளாஸ்ரிக் கூடைகளை பயன்படுத்த வேண்டும்! என கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சுஅறிவித்துள்ளது.
இலங்கையில் காணப்படும் விவசாய உற்பத்திகளின் முறையற்ற சந்தைப்படுத்தல்களினால் பெருமளவு பழங்கள் மற்றும் மரக்கறிகள் பழுதடைந்து, பயனற்று போகின்றன. இவ்வாறு அறுவடையின் பின்னர் சுமார் 40 சதவீதத்திற்கும் மேலான பழங்கள் மற்றும் மரக்கறிகள்  கழிவாக மாறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஓரளவேனும் குறைக்கும் பொருட்டு பிளாஸ்ரிக் கூடைகளை பயன்படுத்தும் திட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 20 பில்லியன் ரூபாவினை நாடு சேமிக்க முடியும் என எதிர் பார்க்ககப்படுகின்றது.

 

எனினும் இதனை உடனடியாக அமுல்படுத்துவதில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களை அடுத்து, சில மாதங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பதிவுகள்:

காங்கேசன்துறை துறைமுகத்தில் பாரந்தூக்கி வீழ்ந்ததில் ஒருவர் சாவு
சனியன்று உண்ணாவிரதம்; குடாநாட்டில் நிலைமைகளை உடன் சீராக்குமாறு வலியுறுத்தி
ஊர்காவற்துறையில் கிறீஸ் மனிதன் விவகாரம்: படையினருக்கும் பொதுமக்களுக்கிடையில் மோதல்!!
யாழ் பகுதியில் பெண்கள் குளிப்பதை மறைந்து பார்த்த கிறீஸ் மனிதன் கைது!!
இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் Jaffna!(யாழ்ப்பாணம்)
515..பார்வையாளர்கள்