nilamuttram.com

லிபியாவில் ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் கடந்த ஆறு மாதங்களில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லிபிய தலைவர் கடாபிக்கு எதிராக கடந்த பல மாதங்களாக தொடர் தாக்குதல் இடம்பெற்று வந்தது. இதன்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறிருக்க திரிபோலியில் உள்ள மக்கள் குடிநீர் உட்பட எதுவும் இன்றி பட்டினியால் பெரும் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர். திரிபோலி பகுதிக்குச் செல்லும் குடிநீர் கடாபியின் படைவீரர்களால் மூடப்பட்டுள்ளதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு , ஐ.நா உட்பட ஏனைய அமைப்புகள் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது

மேலும் சில பதிவுகள்:

200..பார்வையாளர்கள்